Workship Timings

Uchchippillaiyaar Temple

Morning 6.00AM to Evening 8.00PM


Thayumana Swamy Temple

Morning 6.00AM to 12.00 noon

Evening 04.00 P.M To 08.00 P.M

Manikka Vinayagar Temple

Morning 05.30 A.M To 12.00 P.M

Evening 04.00 P.M To 09.00 P.M

அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில்

திருச்சிராபள்ளி

About Images

     நவீனக் கருவிகள் இல்லா அன்றைய காலத்திலேயே இப்பெருங் கோட்டைக் கோயில் 417-படிகளுடன் 273-அடி உயரத்தில் உலகக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், வரலாற்று முக்கிய தத்துவம் பெற்றதாகவும், ஒரு புராதான சின்னமாகவும், இம்மலைக்கோயில் விளங்கி இருக்கிறது. புவியியல் ஆய்வுப்படி இம்மலை 3500-பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பது தெரிகிறது. சோழர், பல்லவர், பாண்டியர், பிற்காலச் சோழர், நாயக்கர், மராட்டியர் காலகட்டடக் கலைப்பாணிகளைக் கொண்டு விளங்குகிறது. மன்னர்கள் மற்றும் குருநில மன்னர்கள் பாதுகாப்பில் இருந்த இத்திருக்கோயில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் துறவியர் பராமரிப்பிலும் இருந்திருக்கின்றது.

இம்மலை புராணச் சிறப்புடையது கொடும்பாளுர் என்ற இடத்திலிருந்து கற்களும் பிற பொருட்களும் கொண்டு கட்டப்பட்டன என்று தெரிகிறது. இம்மலையின்மேல் உள்ள சிவலிங்கம் தானாக வளர்ந்தது என்பர். இராமாயணம் காலத்திலேயே இம்மலை இருந்ததாக தெரிகிறது. திரிசிரன் என்ற அசுரன் இத்திருத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தை பூஜித்து வந்தான் என்பது புராண வரலாறு. மேலும் தாயுமானவர் திருக்கோயில் கருவறை திருப்பணி திரிசிரன் செய்ததாகும். அதனால்தான் பிற்காலத்தில் இம்மலையைச் சூழ்ந்து அமைந்த நகரத்திற்கு திரிசிரபுரம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. சோழர் ஆட்சியியில் உறையூர் தலைநகராக இருந்தபொழுது சாரமாமுனிவர் என்பவர் சிவலிங்கத்தை செவ்வந்தி மலர்க்கொண்டு பூஜித்து வந்தார். அதனால் இறைவன் செவ்வந்திநாதர் என்று அழைக்கப்பட்டார். இறைனை பூஜை செய்வதற்கு அமைக்கப்பட்ட நந்தவனத்தில் உள்ள செவ்வந்திமலர்களை களவாடிய கள்வனைப்பற்றி உறையூரை ஆட்சிசெய்த பராந்தக சோழனிடம் முறையிட அவன் கள்வனை அழைத்து தண்டிக்காத காரணத்தால், முனிவர் இறைவனிடமே முறையிட கிழக்கு முகமாக இருந்த சிவன் மேற்குமுகமாக திரும்பி உறையூரை மண்மாரி பொழிந்து உறையூர் அழிந்தது. அன்றிருந்த கிழக்கு வாசல் பகுதி தெரியும் வண்ணம் நிலை மட்டும் உள்ளது. இக்கிழக்கு வாசலை கடந்து, மேற்கு முகமாக உள்ள மூலவர் இறைவனை தரிசிக்கலாம்.